மழை விட்டும் வடியாத தண்ணீர்.. நரிக்குறவர் இன மக்கள் கடும் அவதி
சிவகங்கை பழமலை நகரில் காஞ்சிரங்கால், இளையான்குடி புறவழிச் சாலை திட்டத்திற்காக நரிக்குவர் இன மக்களின் 8 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தற்காலிகமாக அமைத்துத் தரப்பட்ட தகர செட்டுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கடும் அவதி அடைந்தனர். இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக வேறு வீட்டுமனை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் வழங்கப்படாமல் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகிலேயே தகரத்தினால் ஆன தற்காலிக கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்... ஆட்சியரை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மழையால் தற்காலிக கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்து கர்ப்பிணிகள், குழந்தைகள், கடும் அவதி அடைந்தனர். இங்குள்ள உண்டு, உறைவிட சிறப்பு பள்ளி மற்றும் தண்ணீர் தொட்டி, விளையாடும் இடங்களைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் நோய்த் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.