வேலைக்கு உலை வைத்த வருண பகவான்... கவலையில் வியாபாரிகள்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இடைவிடாது பெய்யும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்றனர். அதிகாலை முதல் நீண்ட நேரம் காத்திருந்த கட்டுமான தொழிலாளர்கள், வேலையின்றி மீண்டும் வீட்டிற்கு சென்றனர். ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட வருவாய் இழப்பில் இருந்து மீளாத சூழலில், மீண்டும் மழை பெய்வதால் சிறுகுறு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story