கோர முகத்தை காட்டிய மழை - கொஞ்ச கொஞ்சமா இரையாகும் வீடு.. செய்வது அறியாமல் திகைத்து நிற்கும் மக்கள்
மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகரில், குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஏழு தெருக்களிலும் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மழைக்கு இப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களை மழை நீர் மூழ்கடித்துவிட்டு மழைநீர் தேங்கி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story