``குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்..'' தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - ரயில்வே டிஜிபி பரபரப்பு தகவல்
டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் சோதனைகள் நடைபெற்றது. அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கவரப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று, சரியான பாதையில் செல்கிறது என்றார். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஆணையம் அறிக்கை தயார் செய்கிறது என்றும் கூறினார். கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு வேறு ஒரு கண்ணோட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இது தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
Next Story