சென்னையில் விடிய விடிய சோதனை! கட்டு கட்டாக சிக்கிய பணம்! மிரண்டு போன அதிகாரிகள்
அடையாறு மண்டல அலுவலகத்தில் "சர்ப்ரைஸ் செக்" என்ற அடிப்படையில் டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அலுவலகத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மண்டல அலுவலர் சீனிவாசன், அடையாறு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தங்கள் அலுவலக ஐ.டி கார்டை போலியாக தயாரித்து, தங்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்திருந்த கார்த்திகேயன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால், கார்த்திகேயன் என்பவர், ஒப்பந்த அடிப்படையில் அங்கு பணிபுரிந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணத்தை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்த கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story