அவதூறு வழக்கு - ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் ஜாமீன்
வீர சாவர்க்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்திக்கு புனே சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சென்றபோது, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக அவரது உறவினர் சத்யாகி சாவர்க்கர் என்பவர் புனே சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த புனே சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி புனே நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜாராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story