``தேசமே துக்கத்தில் இருக்கும் போது ராகுல் இப்படி செய்யலாமா?’’ - நேரம் பார்த்து விழுந்த அடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை தொடர்ந்து தேசமே துக்கத்தில் இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு செல்வதா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வியட்நாமிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், தேசமே துக்கத்தில் இருக்கும்போது ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
Next Story