தாத்தாவாக ப்ரமோஷன் கிடைத்துள்ளது - ராதாகிருஷ்ணன் IAS சொல்லும்போது நமக்கே கண்கலங்கும்

x

சுனாமி கொடுத்த சொந்தம்..தாத்தாவாக ப்ரமோஷன் கிடைத்துள்ளது - ராதாகிருஷ்ணன் IAS சொல்லும்போது நமக்கே கண்கலங்கும்

சுனாமி பேரழிவின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகை கீச்சாங்குபத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் சேர்த்து, அவர் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். அங்கு வளர்ந்த பலர், படித்து உயர்ந்த நிலையில் உள்ளனர். அன்னை சத்யா காப்பகத்திற்கு சென்று, அங்கு வளர்ந்த குழந்தைகளை சந்தித்து, நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டெழுந்து சமூகத்தில் உயர்ந்து நிற்கும் இந்த பிள்ளைகள், மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

==


Next Story

மேலும் செய்திகள்