புனே வரைக்கும் சென்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் செய்த சம்பவம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது,
வல்லம் பகுதியில் மும்பையில் இருந்து சந்தேகப்படும்படியாக அடிக்கடி கொரியரில் பார்சல் வருகிறது என்ற தகவல் கிடைத்தது. அதன்
பேரில் அனுப்புநர் முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கொரியர் வந்தது தெரிய வந்தது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணையில் இறங்கியதை அறிந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மும்பை சென்று, புனேவில் பதுங்கி இருந்த மருந்து நிறுவன நிர்வாக இயக்குனர் சதானந்த் பாண்டேவை கைது செய்தனர். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போதை மாத்திரையை விற்பனை செய்தது தெரியவந்தது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிக அளவில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்