மழைக்காக முளைப்பாரி ஊர்வலம்... கும்மியடித்து வேண்டிய மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். மேற்பனைக்காடு கிராமத்தில், கல்லணைக் கால்வாய் கரையோரம் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் இந்த விழா நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து வந்த முளைப்பாரியை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கல்லனைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.
Next Story