வீட்டு சுவரில் கடன்கார பட்டம்.! - விவசாயி வீட்டில் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்..

x

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - மூக்காயி தம்பதியின் மகன்கள் சக்திவேலும், முத்துக்குமாரும் விவசாய வேலை செய்தும், ஆடு மாடுகளை மேய்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் சக்திவேல் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 7.50 லட்சம் ரூபாயும், முத்துக்குமார் வேறொரு நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாயும் கடன் பெற்றுள்ளனர். கடந்த 3 மாதங்களாக கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில், சகோதரர்கள் இருவரும் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டு நிதி நிறுவனங்களின் ஊழியர்களும், அவர்கள் வீட்டு சுவரின் உள்புறத்திலும், வெளியிலும் இந்த வீடு அடமானத்தில் உள்ளது என எழுதி வைத்துள்ளனர். இதனால், சகோதரர்கள் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்று அத்துமீறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்