பயங்கர மோதல்..! போலீசாரை வெறி கொண்டு தாக்கிய கும்பல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நடந்த அம்பாள் ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து கோவில் பகுதியில் இருந்து இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர்.

சண்டையை தடுக்க முயன்ற போது, காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, எந்தவித பிரச்சினையும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்