வீட்டை பிடுங்கி தாயை துரத்தி விட்ட மகன்... கண்ணீர் மல்க மூதாட்டி வைத்த கோரிக்கை.. உடனே அதிரடி உத்தரவு போட்ட கலெக்டர்
புதுக்கோட்டையில் மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தரக் கோரி கண்ணீர் மல்க மனு அளித்த மூதாட்டியின் துயர் துடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கீரனூர் பகுதியைச் சேர்ந்த 77 வயதான அரசம்மாள், சக்கர நாற்காலியில் வந்து ஆட்சியர் மனு அளித்தார். அந்த வீட்டிலேயே வாழ வைப்பதாக ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததால், மூதாட்டி நெகிழ்ந்தார். உடனடியாக ஆட்சியரின் கையை தொட்டும், கன்னத்தை தடவியும் தனது நன்றியை மூதாட்டி கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.
Next Story