நகைக்கடையில் புகுந்து 3 இளைஞர்கள் மிரட்டல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், நகைக்கடையில் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டி பொருட்களை சேதப்படுத்திய மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆலங்குடி கலைஞர் சாலையில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற 3 இளைஞர்கள், கடை உரிமையாளரிடம் பணம் கேட்ட நிலையில், அதற்கு மறுத்ததால் ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர், அருகிலுள்ள ஜவுளி கடை முன்பு தொங்கிக் கொண்டிருந்த, தலைக்கு அணியும் குல்லாவை எடுத்து முகத்தை மறைத்து, மீண்டும் நகைக்கடைக்குள் சென்றனர். அப்போது, கடை உரிமையாளர் சுதாரிப்பதற்கு முன்பே, நகை எடை வைக்கக்கூடிய இயந்திரத்தை உடைத்து நொறுக்கிவிட்டு, கடையில் இருந்த கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி ஆதாரங்களுடன், காவல்நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்தார். இதன்பேரில், மூன்று இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்