உஷார் மக்களே.. போஸ்ட் ஆபிஸில் நூதன முறையில் மோசடி.. புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த அலுவலரை கைது செய்யக்கோரி, நூற்றுக்காணக்கான பெண்கள், தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். கேசவபட்டி தபால் நிலையத்தில் அலுவலகராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவர், அப்பகுதி மக்களிடம், செல்வமகள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிரந்தர வைப்பு நிதி போன்ற திட்டத்தின் மூலம் பணம் செலுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார். இதை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 40 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் ராஜேஷ் இந்த பணத்தை பெற்று முறையாக கணக்கு தொடங்காமல், வரவு வைக்காமல், முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே பணத்தை மீட்டுத்தரக்கோரி முதலீட்டாளர்கள், வலையபட்டி உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
Next Story