"உன்னை விட்டு என் உயிர் எப்படி வாழும்.." - மரணத்திலும் இணைபிரியாத தம்பதி | Pudukottai | Thanthi TV

x

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் அவரது இறுதிச் சடங்கின்போது, கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனத்திற்கும், அவருடைய மனைவி லோகாம்பாளுக்கும் 50 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

முதுமை காரணமாக லோகம்பாள் உயிரிழந்ததை அடுத்து, கணவர் மயில்வாகனம் மனைவியின் இறுதிச்சடங்கில் துக்கம் தாளாமல் அழுதவாறு இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இருவரின் உடலுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று, இருவரின் உடலும் ஒன்றாகவே தகனம் செய்யப்பட்டன. சிறு பிரச்சினைக்கு கூட சண்டையிட்டு விவாகரத்துப் பெற்றுக் கொள்ளும் நவீன தம்பதிகளின் காலத்தில், மரணத்திலும் இணைபிரியாத இந்த தம்பதியின் இழப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்