வீட்டை விட்டு விரட்டிய மகன்;தாசில்தாரின் தவறான நடவடிக்கையால் அதிர்ந்த மூதாட்டி-புதுகையில் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அரசம்மாள், தனது மகன் வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும், மீண்டும் வீட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்பேரில், புகார் மனுவை வாங்கி விசாரித்த வட்டாட்சியர், மனுவை முறையாக படித்துப் பார்க்காமல், சம்பந்தப்பட்ட மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முடியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, தான் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்காத நிலையில், வட்டாட்சியர் சரியாக படித்து பார்க்காமலேயே விண்ணப்பத்தை நிராகரித்ததாக குமுறினார். இதனால் கோபமடைந்த ஆட்சியர், தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story