கோயிலில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - கொதித்தெழுந்த மக்கள் போராட்டம்... புதுகை அருகே பரபரப்பு
அறந்தாங்கி அருகே அறநிலைய துறைக்கு கோவில் சொந்தமானது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வணி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிகாரிகள் ஒட்டிய நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை ஊர்வணி கிராமமக்கள் கைவிட்டனர்.
Next Story