பல விருதுகளை வென்றெடுத்த இசைக்கலைஞர் தட்சணாமூர்த்திக்கு இன்று பத்மஸ்ரீ விருது | Puducherry
புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கெங்கை அம்மன் கோயில் வீதியில் வசித்து வரும் அவர், புதுவை கலைமாமணி விருது, டாக்டர் அம்பேத்கர் ஃபெல்லோஷிப் தேசிய விருது, டாக்டர் ஆப் மியூசிக் தவில் விருது, டாக்டர் அம்பேத்கர் கலாஸ்ரீ தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். தனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வளரும் தவில் இசைக் கலைஞர்களுக்கு தாம் உறுதுணையாக இருக்க போவதாகக் கூறியுள்ளார்.
Next Story