உடலை நடுங்கவைக்கும் டிசம்பர் 26.. பல உயிர்களை உள்ளே வாரி சென்று குலத்தையே கருவறுத்த சுனாமி பேரழிவு
புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இன்று 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் அனுசரிக்கப்பட்டது. சுனாமி நினைவு நாளையொட்டி அரசு சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயகுமார், சாய் சரவணகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரியில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Next Story