25 பேரை கடித்த வெறி நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பாரதியார் தெருவில் சுற்றி திரிந்த வெறி நாய் சாலையில் சென்ற 25க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. இதனால் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
வெறி நாய் கடித்து ரத்த காயமடைந்தவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரையும் கடித்த வெறிநாயை பொதுமக்கள் கல்லால் அடித்து கொன்றனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டனர்
Next Story