தமிழகத்தை உலுக்கிய சிறுமி மரணம் - தனியார் பள்ளிகள் எடுத்த முடிவு
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு குழு அமைக்க தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, தனியார் பள்ளிகளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் உடனே கண்டறிந்து அதைக் களைய நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர ஆலோசனை கூட்டம் வரும் 10ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள தனியார் பள்ளிகள் சங்கம், சிறுமி இறந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story