"எந்த கொம்பனாலும் இந்த மண்ணை தொட முடியாது"..களத்துக்கு வந்து ..விஜயகாந்த் ஸ்டைலில் பேசிய பிரேமலதா
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அந்த ஊரில் பெண்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அதைத் தொடர்ந்து ஊர் மக்களோடு சேர்ந்து குலவை ஊதி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பின்னர் மக்களிடயே பேசிய அவர், எந்த கொம்பனாலும் இந்த மண்ணை தொட்டுப் பார்க்க முடியாது என்றும், இந்த மண்ணில் யாராவது கை வைத்தால் மக்களுடன் சேர்ந்து முதல் ஆளாக போராட்ட களத்தில் நிற்பேன் என்றும் உறுதி அளித்தார்.
Next Story