ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி மகள்... 3 மணி நேரமாக இரவில் தேடிய குடும்பம்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில், கர்ப்பிணி பெண் கஸ்தூரி பயணித்துள்ளார். விருத்தாச்சலம் அருகே சென்ற போது வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்றுள்ளார். அப்போது, கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை குடும்பத்தினர் இழுத்துள்ளனர். அதற்குள் ரயில் 6 கிலோமீட்டர் வந்துவிட்டதால், சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு கர்ப்பிணியின் உடலை மீட்ட ரயில்வே போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு விழா நடைபெற இருந்த நிலையில், கர்ப்பிணி கஸ்தூரியின் மரணம் குடும்பத்தினரை உறைய வைத்துள்ளது. இதனிடையே அபாய சங்கிலி வேலை செய்யாத விவகாரம் தொடர்பாக, விரிவான விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.