கூட்டு களவாணியான கணவன், மனைவி - கர்ப்பிணிகளே உஷார்.. இப்படியும் சிலர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் 4 சவரன் தங்க செயினை திருடிய வழக்கில், கணவன் - மனைவி கைது செய்யப்பட்டனர். கடந்த 9-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நகை மற்றும் பணத்தை ஊழியர்கள் தனி அறையில் வைத்துள்ளனர். இதனை நோட்டமிட்டு திருடி சென்ற வளையப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, அவரது கணவர் கதிர்வேல் ஆகியோரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
Next Story