பெண்களிடம் உல்லாசமாக இருக்க காம மிருகம் செய்த அசிங்க வேலை - அதிரவைக்கும் பின்னணி
பெண்களிடம் உல்லாசமாக இருக்க காம மிருகம் செய்த அசிங்க வேலை - அதிரவைக்கும் பின்னணி
பூந்தமல்லி அருகே, தகவல் செயலி மூலம் பழகி பெண்ணிடம் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரையான்சாவடியை சேர்ந்த ஜெசி என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தனியார் திருமண தகவல் மையம் மூலம் தொடர்பு கொண்ட கோயம்புத்தூரை சேர்ந்த லெனின் மோகன் என்பவர், தன்னை திருமணம் செய்வதாகக்கூறி பழகி வந்த நிலையில், தன்னிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இதன்படி, மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த லெனின் மோகனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், மது அருந்துவதற்கும், பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கும் பணம் தேவைப்படும் போதெல்லாம், திருமண தகவல் வலைதளத்தில் விண்ணப்பித்த பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது
இதையடுத்து லெனின் மோகனிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.