பெண் பார்க்க சென்ற போது வெளிவந்த ஜிம் ஓனரின் இன்னொரு முகம் - பிளஸ் 2வில் சல்லாப சம்பவம்..
பெண் பார்க்க சென்ற போது வெளிவந்த ஜிம் ஓனரின் இன்னொரு முகம் - பிளஸ் 2வில் சல்லாப சம்பவம்.. அதிர்ந்த பெண் வீட்டார்
பெண்ணை காதலித்து பலாத்காரம் செய்து, திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றிய ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செயதனர்.பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 2014-ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும்போது, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த விக்னேஷ்வர் என்பவரை காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின் கல்லூரி படிப்பை முடித்து இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், விக்னேஷ்வர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்வதாகக்கூறி வீட்டிற்கு வந்து பெண் கேட்டபோது, வரதட்சணையாக 80 பவுன் நகை மற்றும் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டுமென கேட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் திருமண தேதி குறித்து கேட்டபோது ஜாதகம் சரியில்லை என்று கூறி தன்னை ஏமாற்றியதாகவும், இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, விக்னேஷ்வருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரியவந்ததால், காவல்நிலையத்தில் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவின்பேரில் விக்னேஷ்வர் மீது எஸ்சி எஸ்டி பிரிவு மற்றும் கற்பழித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விக்னேஷ்வரை கைது செய்தனர்.