"நெருங்கும் பொங்கல்.. டெல்டாவிற்கு குறி வைக்கும் மழை.."- வானிலை ஆய்வு மையம் அலர்ட்..
ஜனவரி 11-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story