நெருங்கும் பொங்கல் பண்டிகை.. திக்குமுக்காடும் சென்னை.. மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
பொங்கல் சிறப்பு பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தும் இயக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையின் மையப்பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கே பல மணி நேரம் ஆவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சிரமத்தை போக்கும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கினால் ஏதுவாக இருக்குமென கூறுகின்றனர். இதனிடையே, வானகரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story