சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சரிடம் மனு கொடுத்த சிறுமிகள்

x

தூத்துக்குடி மாவட்டம், போலையர்புரம் பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் போது கவிதன் மற்றும் செல்வ சுயம்பு என்ற தம்பதியின் இரட்டை மகள்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், தங்கள் தாயார் திருப்பூரில் நீண்ட நாள்களாக ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்