பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கோவை வழியாக சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், நாளை அதிகாலை 5 மணிக்கு மதுரை சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாளை மதுரையில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.15 மணிக்கு மதுரை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்