பாச மகளுக்காக பொங்கல் சீர்...தலையில் கரும்புக்கட்டு, சைக்கிளில் 14 கி.மீ பயணம்-ஊரே கும்பிடும் அப்பா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, முதியவர் ஒருவர், தலையில் கரும்புக்கட்டை சுமந்து சைக்கிளில் 14 கிலோமீட்டர் தூரம் சென்று மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்துள்ளார். கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவரது மகள் சுந்தரம்பாளைக்கு, திருமணமாகி 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதனால் மகிழ்ச்சியடைந்த செல்லதுரை ஆண்டுதோறும் பொங்கல் சீர்வரிசை பொருட்களுடன், கரும்பு கட்டை மட்டும் தலையில் சுமந்து, சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்பம்பட்டி கிராமத்திற்கு சைக்கிளில் சென்று மகளுக்கு கொடுத்து வருகிறார். இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
Next Story