தன் ஒரு உயிர் பிரிந்ததும் 5 உயிர்களை வாழவைத்த அரசு பள்ளி HM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். பொள்ளாச்சி நல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். தலைமை ஆசிரியரான இவர் கடந்த 24ஆம் சாலை விபத்தில் சிக்கினார். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 5 பேருக்கு வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
Next Story