``என்ன அனுப்புறேனு சொன்ன.. இன்னும் அனுப்பல'' - கஞ்சா கேஸில் கைதானவர் மனைவியிடம் போலீஸ் பேசிய ஆடியோ
கஞ்சா கடத்தி வந்த ஆந்திர இளைஞரை கைது செய்து, அவருடைய மனைவியிடம் கூகுள்பே மூலம் காவலர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சரவணன் என்பவரையும், ஒடிசாவை சேர்ந்த ஸ்வஸ்திகா என்ற இளம்பெண்ணையும், திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, சரவணனின் மனைவி கீதாவிடம், திருத்தணி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெருமாள், லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
Next Story