தமிழக போலீசை வழிமறித்து வாக்குவாதம் செய்த புதுச்சேரி போலீஸ்.. எல்லையில் பரபரப்பு

x

எல்லைப் பகுதியில் உள்ள சாராய கடையில் சோதனை மேற்கொண்ட தமிழக போலீசாரை வழிமறித்து கேள்வி எழுப்பிய புதுச்சேரி போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையிலான போலீசார், புதுச்சேரி மடுகரை பகுதியில் உள்ள சாராயக் கடையில் திடீரென சோதனையிட்டனர். தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் சாராயங்களை பறிமுதல் செய்ததுடன், பணியில் இருந்த காசாளரையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக போலீசார் அங்கிருந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்