14 வயது சிறுமி சித்திரவதை செய்து கொலை வழக்கு..! சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு
சென்னை, அமைந்த கரையில் 15 வயது சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஆறு பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது .
சென்னை அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது நிசாத். இவர், தன் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை ஆறு பேருடன் சேர்ந்து சித்திரவதை செய்து கொலை செய்திருந்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில், முகமது நிஷாத், நிசாத்தின் மனைவி நிவேதா, அவரது நண்பர் லோகேஷ் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருந்தனர். இந்நிலையில், கைதான ஆறு பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து, ஆறு பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.
Next Story