கணவரை ரூமில் பூட்டிவிட்டு பெண் நீதிபதி வீட்டில் சட்டம் ஒழுங்கு போலீஸ் ரகளை - அதே இடத்தில் அகால மரணம்

x

மது போதையில் நீதிமன்ற பெண் நீதிபதி வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்த காவலர் தவறி விழுந்து இடுப்பில் கம்பி குத்தி உயிரிழப்பு.

செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார்(30). இவர் கேகே நகர் 2வது செக்டார் பகுதியில் வசித்து வருகிறார்.

இதே பகுதியில் மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் இவரது அண்ணன் பெருமாளும், பெருமாளின் மனைவியான செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காவலர் செல்வகுமார் இன்று இரவு தனது அண்ணன் வீட்டுக்கு மது போதையில் சென்று தனது அண்ணன் பெருமாளை அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

பெருமாள் அளித்த தகவலின் பேரில் கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையில் இருந்த பெருமாளை மீட்டனர்.

பின்னர், காவலர் செல்வகுமார் மது போதையில் மற்றொரு அறைக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை உடைத்து, பின்புறம் இருந்த கதவு வழியாக கீழே குதித்த போது காம்பவுண்ட் சுவரில் இருந்த கம்பி காவலர் செல்வகுமார் இடுப்பின் பின் பகுதியில் குத்தி சிக்கிக் கொண்டுள்ளார்.

உடனடியாக காவலர் செல்வக்குமாரை மீட்ட போலீசாரும் அவரது அண்ணனும் கேகே நகர் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே காவலர் செல்வகுமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்