சென்னையில் அதிர்ச்சி - திடீரென காவலாளி எடுத்த விபரீத முடிவு..

சென்னையில் அதிர்ச்சி - திடீரென காவலாளி எடுத்த விபரீத முடிவு..
x

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி தனது உறவினரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்று இருக்கிறார்.

அப்போது பீர்க்கன்காரணை அருகே சென்று கொ​ண்டிருந்த போது கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது செல்போன் மற்றும் இரு சக்கரவாகனத்தை

போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடம் பகுதியில் சாலையோரமாக உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்து இருக்கிறார். இது தொடர்பாக ஒரகடம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

பீர்க்கன்காரணையில் இருந்து எப்படி கிருஷ்ணமூர்த்தி ஒரகடம் வரை சென்றார் என அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பியதோடு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்