பெண் வழக்கறிஞர் மீது - பாமகவினர் பரபரப்பு புகார்..
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்தநாள் விழாவில், பாமகவை விமர்சித்ததாக பெண் வழக்கறிஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழவில் பேசிய பெண் வழக்கறிஞர் சினேகா என்பவர், பாமக பற்றியும், ராமதாஸ் மற்றும் வன்னியர்களின் உள்ஒதுக்கீடு பற்றியும் இழிவாக பேசி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சமூக மோதலை உருவாக்குபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,பார் கவுன்சிலில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story