அன்புமணி ராமதாஸ் போட்ட பரபரப்பு ட்வீட்
அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுக திட்டத்தை கைவிடவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆவின் கிரீன் மேஜிக் பால் அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பாலின் அளவை 50 மில்லி குறைத்துவிட்டு, விலையையும் 3 ரூபாய் உயர்த்துவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க நினைத்தால், விலையை 20 ரூபாயாக குறைத்திருக்கலாம் அல்லது அளவை 550 மில்லி லிட்டராக உயர்த்தி 25 ரூபாயாக நிர்ணயம் செய்திருக்கலாம் என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Next Story