சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி - அதிர்ச்சி காட்சிகள்
சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி - அதிர்ச்சி காட்சிகள்
குமரி மாவட்டம் கருங்கலில் அரசு அலுவலகத்தில் வைத்து சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியை சேர்ந்த ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர், தனது சகோதரரிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கி அதனை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். எனினும், சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல், திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. மீண்டும் சார் பதிவாளரிடம் முறையிட்ட நிலையில், மீண்டும் அதிகாரி மறுக்கவே ஆத்திரமடைந்த ஜெஸ்டஸ் மார்ட்டின், தண்ணீர் பாட்டிலில் தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது, சார் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றார். நற்வாய்ப்பாக தீபற்றாத நிலையில், அதிர்ந்து போன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஜெஸ்டஸ் மார்ட்டினை போலீசார் கைது செய்த நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.