தமிழகம் இதுவரை கண்டிரா கொடிய விபரீத மரணம்.. இதுவே முதல்முறை - உண்மை காரணம் கண்டுபிடிப்பு
தமிழகம் இதுவரை கண்டிரா கொடிய விபரீத மரணம்.. இதுவே முதல்முறை - உண்மை காரணம் கண்டுபிடிப்பு.. இந்தியா முழுக்க பரவிய புதிய பயம்
அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதே உயிரிழப்பிற்குக் காரணம்
அனுபவம் வாய்ந்த தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதே குன்றத்தூரில் இரு குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
சென்னை குன்றத்தூரை அடுத்துள்ள மணஞ்சேரியில் இரண்டு மாதத்திற்கு முன் புதிய வீட்டிற்கு வாடகைக்கு வந்து இருக்கின்றனர் கிரிதரன் - பவித்ரா தம்பதி. இவர்களுக்கு ஆறு வயதில் விஷாலினி , ஒரு வயதில் சாய் சுதர்சன் என இரு குழந்தைகள்...
புதிதாக வந்த வீட்டில் பூச்சிகள் மற்றும் எலி தொல்லை இருந்ததால் தியாகராய நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை அணுகி இருக்கிறார் கிரிதரன். இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை மாலை கிரிதரன் வீட்டிற்கு வந்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள்
பூச்சி கொல்லி மருந்துகளை அடித்துச் சென்றுள்ளனர்...
தொடர்ந்து வீட்டில் தூங்கிய கிரிதரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றனர்.ஆனால் மருத்துவமனை செல்வதற்க்குள் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தில் ஊழியர்கள் இருவரைக் கைது செய்து தலைமறைவான உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே வீட்டில் வைக்க வேண்டிய பூச்சிகொல்லி மருந்தின் அளவானது பத்து மடங்கு அதிகமாக சுமார் 12 மாத்திரைகளை வைத்ததுதான் குழந்தைகள் உயிரிழப்பிற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. கிரிதரன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன.தொடர்ச்சியாக தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நமது செய்தியாளர் சதீஷ் தரும் தகவல்களைப் பார்க்கலாம்
இந்த சம்பவத்தால் கடுமையாகப் பாதிப்படைந்த கிரிதரன் - பவித்ரா தம்பதி தற்போது வரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். ஆசையாய் பெற்ற 2 பிள்ளைகள் உயிரிழந்தது கூட இவர்களுக்கு தெரியாது என்பது கொடுமையின் உச்சம். போரூர் மருத்துவமனையில் இருந்து நமது செய்தியாளர் சுரேந்தர் தரும் தகவல்களை பார்க்கலாம்.
இரு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.தம்பதிகளில் யாராவது ஒருவர் உடல் நலம் தேறினால் அவர்களிடம் ஒப்புதல் பெற்று விட்டு பிரேதப் பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர்.
பூச்சிகொல்லி மருந்தினால் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து பலரும் மீள வில்லை என்பதே நிதர்சனம்