சென்னையில் புதிய பாலம் திறப்பு... பொதுமக்கள் பரபரப்பு பேட்டி
தாம்பரம் - வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே திட்டப் பணிகளின் கீழ் 254 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 60 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் பாதையில், புதிய மேம்பாலம் ஒன்று கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த பாலம் காரணமாக, சாலையை கடப்பது சிரமாக இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் மார்க்கத்திலிருந்து, பெருங்களத்தூர் ரவுண்டானா செல்லும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பயணிகள் ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்துவதால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகும் குற்றம் சாட்டி உள்ளனர். இதனை தடுக்க , போக்குவரத்து போலீசாரை அங்கு பணியில் அமர்த்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.