தொடர் விடுமுறை சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. திக்கு முக்காடும் சாலைகள்

x

தொடர் விடுமுறையால், சொந்த ஊர்களுக்கு செல்ல அணிவகுத்த வாகனங்களால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புனித வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தாம்பரம்-இரும்புலியூர் மேம்பாலம் முதல் வண்டலூர் வரை செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


Next Story

மேலும் செய்திகள்