மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்..நெஞ்சை பிடிக்க வைக்கும் கட்டணம்..-5 மடங்கு உயர்ந்ததால் அதிர்ச்சி

x

தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

மிலாடி நபி , காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என 4 நாள் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்வு.

4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றோர் இன்றும் , நாளையும் அதிகளவில் சென்னைக்கு பயணிக்க உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு.

  • நெல்லை - சென்னை 5 ஆயிரம் ரூபாய் வரையும் ,
  • மதுரை - சென்னை 4 , 800 ரூபாய் வரையும் ,
  • கோவை - சென்னை 3 ஆயிரம் ரூபாய் வரையும்
  • ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்.
  • இன்று இரவு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு.
  • சென்னை திரும்புவோருக்காக
  • அரசு சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது .
  • ஆம்னி பேருந்து கட்டணம்.
  • திருச்சி - குறைந்தபட்சம் 1500 , அதிகபட்சம் 3 ஆயிரம்
  • கோவை - குறைந்தபட்சம் 1500 , அதிகபட்சம் 3000
  • மதுரை -குறைந்தபட்சம் 1900 , அதிகபட்சம் 4800
  • தூத்துக்குடி -குறைந்தபட்சம் 2100 , அதிகபட்சம் 3500 .
  • நெல்லை - குறைந்தபட்சம் 2000 , அதிகபட்சம் 5 ஆயிரம் .
  • சேலம் - குறைந்தபட்சம் 1500 , அதிகபட்சம் 2500 .


Next Story

மேலும் செய்திகள்