திடீரென இணையத்தில் டிரெண்டாகும் வைரல் வீடியோ - பலர் பாராட்டு | Viral Video | Thanthi TV
பெங்களூருவை சேர்ந்த இருசக்கர டாக்சி ஓட்டுநர் ஒரு மாதத்தில் 85 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், இதற்காக தான் 13 மணி நேரம் கடினமாக உழைப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் வேலை பார்ப்பதை விட இருசக்கர டாக்சி ஒட்டுவது மிகவும் சுதந்திரமான வேலை என்றும் அதிகம் உழைத்தால் வருமானம் நிறைய கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா பகிர்ந்துள்ள நிலையில் இருசக்கர டாக்சி ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story