வீடியோ ஆதாரம் - சிக்கலில் பாரிசாலன்
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் பாரிசாலன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் நகர காவல் நிலையத்தில், அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீடியோ ஆதாரங்களுடன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மதி என்பவர் அளித்த அந்த புகாரில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக அம்பேத்கர் மீது அவதூறு பரப்பும் வகையில் யூடியூப் சேனலில் பாரிசாலன் பேசியதாக கூறியுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story