பரந்தூர் விவகாரம் - பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை
ஏகனாபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கணபதி. பாமக இளைஞரணி துணை அமப்பாளராக உள்ளார். இவரது மனைவி திவ்யா கணபதி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால், தங்களது கிராமத்தில் குடியிருப்புகளும், விளை நிலங்களும் பறிபோகுமே என்று மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த திவ்யா கணபதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காவல்துறைக்கு தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய 32 வயதான இளம் பெண் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்தது,13 கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.