தங்கமா இந்த வைகை ஆற்று அயிரை மீன்கள்! - ரேட்டை கேட்டாலே ஷாக்கா இருக்கு
பரமக்குடி வைகை ஆற்றில் பிடிக்கும் அயிரை மீன்கள் கிலோ 2 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆவதால் மீன் பிடிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இந்த தண்ணீரில் மருத்துவ குணமிக்க அயிரை மீன்கள் செல்வதால், அதனை கொசு வலைகளை கொண்டு பொதுமக்கள் பிடித்து வருகின்றனர். இவற்றை வாங்கும் மீன் வியாபாரிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு உயிரோடு அனுப்பி வைக்கின்றனர். ஒரு கிலோ அயிரை மீன்கள் ரூபாய் 2 ஆயிரத்து 500 வரை விற்பனையாவதால் மீன் பிடிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story