கனமழையின் கோரத்தாண்டவம்..2023-ஐ நினைவுபடுத்திய அதிர்ச்சி காட்சிகள் | Papanasam
பாபநாசம் அருகே வாய்க்கால் உடைப்பு - சுற்றுவட்டார பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்
பொதுமக்கள் தவிப்பு
தற்போது பாபநாசம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர், தாமிரபரணி நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தொடர் மழை மற்றும் வாய்க்கால் கரை உடைப்பால் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தெருக்களிலும் பள்ளத்தை நோக்கி வெள்ளம் போல் மழை நீர் கரை புரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அப்பகுதியினர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய தாமிரபரணி நகர் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்ற முதியவரை அம்பை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தற்போது மீட்டுள்ளனர். இதை போல் அதிகளவு வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை தீயணைப்பு துறையினர் மிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..